தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

61shares

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரிகளுடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டனர்.

இதன் போதே தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பாருக் பவாஸ் கைது செய்யப்பட்டார். இவர் இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது மேல்மாகாண புலனாய்வு பிரிவு, சந்தேகநபர் தொடர்பில் மேற்கொண்ட விசாரணை அறிக்கை வாழைத்தோட்டம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பான அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதன்படி சந்தேகநபரை எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை வழங்குவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க