சிறிலங்கா பொலிஸ் உயர் மட்டத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர உத்தரவு!

  • Shan
  • June 18, 2019
589shares

இலங்கையில் நடந்த பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் குறித்த விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினை சட்ட மா அதிபர் விடுத்துள்ளார்.

இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல், சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுவெடிப்பு, மாவனெல்ல புத்தர் சிலை உடைப்புக்கள் உள்ளிட்ட சில சம்பவங்கள் தொடர்பில் நடத்தப்பட்டுவரும் விசாரணைகளையே துரிதப்படுத்துமாறு சட்ட மா அதிபர் பணித்துள்ளார்.

குறித்த விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு என்பவற்றால் நடத்தபட்டுவரும் நிலையில் அவை துரிதமாக்கப்படவேண்டுமென்று உயர்மட்ட அழுத்தங்கள் எழுந்துள்ளன.

இதனிடையே ஜமாதே மிலாது இப்ராஹிம் மற்றும் விலாயட் அஸ் செலானி ஆகிய அமைப்புகள் குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்ட மா அதிபர் பிரதிப் பொலிஸ் மா அதிபரை அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க