இலங்கையில் அதிகாலை இருளில் இடம்பெற்ற பெரும் சோகம்!

370shares

மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதியின் வெலிகந்த வெனபிடிய பகுதியில் பாரிய விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹயஸ் வான் ஒன்று சிறிய ரக பாரவூர்தியுடன் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் நான்கு பெண்கள் அடங்குவதாகவும் அவர்கள் வெலிகந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் காயமடைந்த 12 பேரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க