இந்தியாவில் கடவுளான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்; அபிஷேகம் செய்து ஆரத்தி காட்டி வழிபடும் இந்தியர்!

126shares

டிரம்பை கடவுளாக கருதி, அவரது சிலையை தினமும் வழிபட்டு வருகிற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தெலுங்கானாவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்தியா தெலுங்கானா மாநிலம் கொன்னே கிராமத்தை சேர்ந்தவர் புஸ்சா கிரு‌‌ஷ்ணா (வயது 32). என்ற விவசாயி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் அபிமானி ஆவார். தனது வீட்டிலேயே டிரம்புக்கு 6 அடி உயர சிலை அமைக்கும் அளவுக்கு அவரது அபிமானம் சென்றுள்ளது.

டிரம்பை கடவுளாக கருதி, தனது வீட்டிலேயே டிரம்புக்கு 6 அடி உயர சிலை வைத்து புஸ்சா கிரு‌‌ஷ்ணா தினமும் வழிபட்டு வருகிறார். சிலையின் நெற்றியில் பொட்டு வைத்து, மாலை அணிவிக்கிறார். அபிஷேகம் செய்து ஆரத்தி காட்டுகிறார். அப்போது, ‘ஜெய் ஜெய் டிரம்ப்’ என்று மந்திரம் உச்சரிப்பதுபோல் கூறுகிறார்.

இது போதாது என கடந்த 14-ந் தேதி, டிரம்பின் 73-வது பிறந்தநாளையொட்டி, தனது வீட்டு சுவற்றில் டிரம்ப் சுவரொட்டியை புஸ்சா கிரு‌‌ஷ்ணா ஒட்டி இருந்ததாவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி கிரு‌‌ஷ்ணாவிடம் வினவியபொது அவர் கூறுகையில், ‘‘டிரம்ப் ஒரு வலிமையான தலைவர். அவரது துணிச்சலான செயல்பாடு எனக்கு பிடிக்கும். எனவே, அவரை வழிபடுகிறேன். என்றாவது ஒருநாள் அவரை நான் சந்திப்பேன்’’ என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க