ஸ்ரீலங்காவுக்கு மோடி வந்து சென்ற பின்னர் வடக்கு கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

384shares

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்த பின்னர் 4,000 க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் வடக்கு கடலில் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடித்து வருவதாகவும் இதனால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் வடபகுதி மீனவர்களின் குழு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் முறையிட்டுள்ளது..

இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்களைப்பிடிப்பதால் வட கடலில் மீன் முட்டைகள் அழிக்கப்படுவதாக மீனவர்கள் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலத்தில் 30 முதல் 40 வரையான இந்திய மீன்பிடி படகுகள் வட கடலில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவை ஸ்ரீலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்டன. இருப்பினும், தற்போது ஏராளமான இந்திய படகுகள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும்போது சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என்று வடக்கு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், படகுகளை கைப்பற்ற வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் உள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டால் தமது மீனவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க