இலங்கையில் இனிமேல் இந்த இடத்திற்கும் ஓடவுள்ள ரயில்! மகிழ்ச்சியில் பல்லாயிரம் மக்கள்!!

  • Shan
  • June 24, 2019
535shares

கொழும்பு மாவட்டத்தின் கடுவலையில் இருந்து, கோட்டை தொடருந்து நிலையம் வரையிலான இலகு ரயில் பாதை அமைக்கப்படவுள்ளதாக பெரு நகரம் மற்றும் மேல் மாகாண அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இந்தப் பணிகள், அடுத்த மாதம் 5ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்விடயத்தை குறிப்பிட்டார்.

கடுவலைக்கும் கொழும்புக்குமான போக்குவரத்து மார்க்கத்தில் கடும் நெரிசல் நிலைமை காணப்படுவதுடன் இதுவரை ரயில் மார்க்கமும் இல்லாத நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையிலேயே மேற்படி காரணங்களைக் கவனத்திற்கொண்டு இலகு ரயில் பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து துரிதமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியூடான போக்குவரத்திலீடுபடும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சியான ஒரு இலகு பயணம் ஏற்படும் என எதிர்பார்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க