கிழக்கு மாகாணத்தை முஸ்லீம் அரசியல்வாதிகளிடம் அடகுவைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

127shares


கல்முனையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் பொறிக்குள் சிக்கவைத்துள்ளது.

அதாவது கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தாதவரை கிழக்கில் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பால் நகர முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.

இலங்கையில் நடத்தப்பட்ட ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த அச்சம் இலங்கையின் அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியுள்ளது.

அது நாட்டின் தேசிய கொள்கையிலும் பாதுகாப்பு நடைமுறைகளிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாற்றம் சர்வதேசத்திலும் பிராந்தியத்திலும் இலங்கையின் இறைமைக்கு பாதகமான நிலையை உருவாக்கி வெளிநாட்டு வல்லரசுகளின்

பாதுகாப்பு வளையத்திற்குள் இலங்கையை கொண்டுவந்துள்ளது.

இது வடகிழக்கு தமிழ் மக்களின் அரசியல் ரீதியான கோட்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக கிழக்கில் உள்ள தமிழர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து மிகுந்த அச்சமடைந்துள்ளனர். முஸ்லீம் சமூகம் மீது நம்பிக்கை இழந்து நிற்கின்றனர். வடகிழக்கு இணைப்பு தமிழ் தேசியம் என்பவற்றிற்கு அப்பால் கிழக்கு தமிழர்கள் தற்போது தங்களது இருப்புக் குறித்தே அதிகம் கவலைப்படுகின்றனர்.

கிழக்கை தமிழர்கள் இழந்துவிட்டதாகவே கருதுகின்றனர்.

தாங்கள் நம்பிப் பழகிய சமூகம் தேங்காயும் பிட்டுமாக தமிழர்களும் முஸ்லீம்களும் வாழ்வதாக கூறிக்கொண்டே தமிழர்களை அழிப்பதற்கும் தமிழர்களை சிறுபான்மையினராக மாற்றுவதற்கும் திரைமறைவில் பல சதித்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வந்தமை இன்று கண்டுபிடுக்கப்பட்டுள்ளமை முஸ்லீம்கள் மீதான நம்பிக்கையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.

முஸ்லீம்களின் இன விகிதாசாரம் என்பது மிகவும் கட்டமைக்கப்பட்ட திட்டமிடப்பட்ட சதித்திட்டம் ஊடாக உருவாக்கப்பட்டது என தமிழர்கள் கருதுகின்றனர்.

அதாவது தமிழ் மக்களின் முதுகில் குத்தி தமிழ் மக்களை விகிதாசார அடிப்படையில் முந்தவேண்டும் என்பதற்காக மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட செயற்றிட்டத்தின் ஊடாக மாற்றியமைக்கப்பட்டதே இந்த விகிதாசாரம் இதனை ஏற்கமுடியாது என தமிழர்கள் கூறுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை இடம்பெயர்ந்த இரண்டு இலட்சம் தமிழர்களை தள்ளி தமிழ் மக்கள் 38 வீதம் உள்ளனர் முஸ்லீம்கள் 36 வீதம் உள்ளனர். ஆனால் இதனை மறைத்து கிழக்கில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளதாக கூறி கிழக்கு முஸ்லீம்களின் மாகாணம் என பிரகடணப்படுத்தியுள்ளனர்.

எனவே கிழக்கில் முஸ்லீம்கள் விகிதாசார ரீதியில் அதிகமாக உள்ளார்கள் என்பதை காரணம் காட்டி தமிழர்களை அரசு தட்டிக் கழிக்க கூடாது என தமிழர்கள் கருதுகின்றனர்.

இன விகிதாசாரம் விடயத்தில் முஸ்லீம்கள் முழு இலங்கையையும் கைப்பற்றும் நோக்குடன் செயற்பட்டுள்ளார்கள். அப்கானிஸ்தான் கம்போடியா போன்று இலங்கையிலும் விகிதாசார அடிப்படையில் கைப்பற்றும் நோக்குடன் செயற்பட்டுள்ளார்கள் என்பது ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் நடைபெற்ற விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதில் கிழக்கு மாகாணம் விதிவிலக்கல்ல கிழக்கை கைப்பற்றுவதே முஸ்லீம் தலைவர்களின் பிரதான நோக்கம்.

தங்களது இனத்தை பெருக்குதல், அதற்கான பலதார திருமணம், பிறப்பு வீதத்தை அதிகரித்தல், காணிகளை பெருந்தொகை பணம் கொடுத்து வாங்குதல், பொருளாதார ரீதியாக இலங்கையின் வர்த்தகத்தை தீர்மானித்தல் மாற்று இனத்தின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துதல் அதற்காக பல செயற்றிட்டங்களை உருவாக்கி செயல்படுத்தல் என பல்வேறு இரகசிய திட்டங்களை முஸ்லீம் சமூகத்தில் உள்ளவர்கள் செய்துள்ளனர். இதற்காக வெளிநாடுகளில் இருந்து பெருந் தொகை பணம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பல முஸ்லீம்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இதுகுறித்து முஸ்லீம் சமூகம் இன்றுவரை வாய்திறக்கவில்லை.

இன் நிலையில் கிழக்கில் கிஸ்புல்லாவுக்கு எதிராக தொடங்கிய போராட்டம் முதல் தற்போது கல்முனையில் நடைபெறும் போராட்டம்வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிர்ப்பந்தத்திற்குள் தள்ளியுள்ளது.

அதாவது ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு குறித்து கொண்டுள்ள கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் முஸ்லீம் நல்லிணக்கம் என்பது முஸ்லீம் தலைமைகள் கிழக்கில் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஊடாக தமிழ் மக்கள் எதனையும் அடையவில்லை என்பதே யதார்த்தம்.

நாட்டில் தலைதூக்கியுள்ள இஸ்லாமிய தீவிரவாதம் கிழக்கில் இருந்தே முளைவிட்டுள்ளது என்பதுடன் அது கிழக்கு தமிழர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் உறவை கிழக்கு தமிழர்கள் இனியும் ஏற்கமாட்டார்கள். அதாவது கிழக்கில் முஸ்லீம்களுடன் இணைந்து எதையும் சாதிக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.

இதன் காரணமாகவே இன்று தங்களை அழித்த சிங்கள இனவாதத்தையே தங்களின் பாதுகாப்பாக கருதும் அளவுக்கு கிழக்கு தமிழர்கள் சென்றுள்ளனர்.

இது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளியாக மாறியதன் விளைவு. அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் இதுவரை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியவில்லை.

அத்துடன் கிழக்கில் தமிழ் முஸ்லீம் இன ரீதியான பிரச்சினைகள் உருவாகும் போது அதனை அதனை தீர்க்க முடியாது முஸ்லீம் தலைவர்களின் காலில் விழுந்து கேட்கும் நிலையில் தமிழ் தலைவர்கள் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் தமிழர்கள் மாற்று வழியை தேட தொடங்கியுள்ளனர். தங்களைப் பாதுகாக்க ஒரு சக்தி தேவை எனக் கருதுகின்றனர். அது தற்போதைய நிலையில் பௌத்த இனவாதமே என்பதை உணர்ந்து அதன் ஊடாக தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற முயற்சி செய்கின்றனர்.

இதே பௌத்த இனவாதம் கடந்த காலங்களில் தமிழர்களை படாத பாடு படுத்துயுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் அது மீண்டும் தமிழர்களை நோக்கி திரும்பும் என்பதும் தெரியும்.

ஆனால் இந்த முடிவை தமிழர்கள் எடுக்காவிட்டால் இன்னும் சில வருடங்களில் கிழக்கில் இருந்து தமிழர்கள் துடைத்தெரியப்படும் அபாயம் உண்டு.

அப்போதும் தமிழ் அரசியல் வாதிகள் போராடிக்கொண்டிருப்பார்கள் என்பதுதான் உண்மை.

இன் நிலையில் கிழக்கு தமிழர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து இவ்வாறான முடிவுகளை எடுப்பதில் தவறில்லை என்பதை நியாயப்படுத்துகிறது.

கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லீம் அரசியல் பிரதிநிதிகள் இத்தனை அநியாயங்களை புரிந்தும் கிழக்கை தனி இஸ்லாமிய இராச்சியமாக மாற்றுவதற்காக முஸ்லீம்கள் வெளிப்படையாக செயற்பட்ட போதும் அது குறித்த கண்டுகொள்ளாது கிழக்கு தமிழர்களை தொடர்ந்தும் முஸ்லீம் களிடம் அடகுவைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் அரசியல் செய்ய முடியாது.

கிழக்கு தமிழர்களின் பாதுகாப்பு குறித்து சிந்திக்கின்ற தலைமைகள் வேண்டும்.

தமிழ் தேசியம் கிழக்கு தமிழர்களின் இருப்பு குறித்து சிந்தித்ததாக தெரியவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கேவின் கொள்கைக்கு அமைய வடக்கு தமிழர்களுக்கு கிழக்கு முஸ்லீம்களுக்கு என்ற நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டது. கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரைவார்க்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்பட்டு வருகின்றனர்.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கில் முஸ்லீம்களுடன் இணைந்து செயற்படவே விரும்புகிறது.

ஆனால் கடந்த காலங்களில் கிழக்கிஸ்தான் குறித்து பல எச்சரிக்கை தகவல்கள் விடுக்கப்பட்டும் அதனை பொருட்படுத்தாது கிழக்கின் அரசியல் அதிகாரத்தை முஸ்லீம்களுடன் கொடுத்து இஸ்லாமிய தீவிரவாதம் வளர்ச்சி பெறுவதற்கு உதவினர். இன்று கிழக்கில் உருவாகிய இஸ்லாமிய தீவிரவாதம் முழு நாட்டிற்கும் அச்சுறுத்தலாக வடிவெடுத்துள்ளது.

ஆனால் தொடர்ந்தும் கிழக்கில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலமைகள் முஸ்லீம் அரசியல்வாதிகளுடன் கொஞ்சி குலாவுகின்றனரே தவிர கிழக்கு தமிழர்களின் பாதுகாப்பு குறித்து கிஞ்சித்தும் கவலைகொண்டதாக இல்லை.

தமிழர்களை இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பதற்கான எந்தவித எதிர்கால திட்டங்களும் அவர்களிடம் இல்லை ஒரு வேலை அதிகாரப் பகிர்வு தமிழர்களுக்கு கிடைத்தால் அப்போது கிழக்கு தமிழர்களிடம் இருக்காது.