இன்றுகாலைவேளை கோட்டா தொடர்பில் புதுமையான தகவல்!

452shares

இன்றையதினம் (25) காலைவேளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய தொடர்பில் புதுமையான தகவலைத் தெரிந்துகொள்ள முடியும் எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய கூட்டத்தாபனத்துடன் இணைந்து மலேசியாவின் ஐரெக்ஸ் எண்ணெய் நிறுவனத்தினால் வத்தளை முத்துராஜவலையில் அமைக்கப்பட்டுள்ள ஐரெக்ஸ் எண்ணெய் நிறுவனத்தின் திறப்பு விழா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கை தொடர்பில் ஏனைய நாடுகள் நம்பிக்கை இழக்கவில்லை எனவும், தாம் நாட்டை பொறுப்பேற்றபோது போது காணப்பட்ட பாரிய கடன் சுமை தற்போது குறைந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பொருளாதாரம் துரித வளர்ச்சி அடைய வேண்டும். தற்போதுள்ள சமுகத்தினர் நவீன மயப்படுத்தப்பட்ட பொருளதார வளச்சியையே விரும்புகின்றனர். வெறுமனே வீதி அபிவிருத்திகள், நிவாரணங்களினூடாக நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது. இவற்றினூடாக நாட்டை வளர்ச்சிப்பாதையை தீர்மானிக்கவும் முடியாது. முதலீடுகளையும் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க