இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் புதிய தகவல் ஒன்றை அம்பலப்படுத்திய ஹக்கீம்!

231shares

இன்றைய காலைநேர செய்திப் பார்வையின் காணொளித் தொகுப்பு...

இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றதை ஏற்றுக்கொள்ளுமாறு கூறிய பின்னரே ஐ.எஸ் அமைப்பினர் இதை பொறுப்பேற்றார்கள் என்று முன்னாள் அமைச்சர் ரவுப் ஹக்கீ ம் தெரிவித்துள்ளார். தலாதுஓய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருப்பதாக கூறப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஐ.எஸ் தீவிரவாதிகள் தான் இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்று கூறுவதில் ஐயம் இருக்கிறது.

தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் தொலைபேசியில் அழைத்து இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்குமாறு கூறிய பின்னரே இரண்டு நாட்கள் கழித்து இந்த தாக்குதலை தாங்கள் பொறுப்பேற்பதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் அறிவித்தனர்.

இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசாங்கத்தின் மீது எனக்கு அதிருப்தி இல்லை. தொடர்ந்தும் இந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களது வலியுறுத்தலாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனுடன் மேலும் பல செய்திகளைத் தாங்கியதாக அமைகிறது இன்றைய காலைநேர செய்திப் பார்வையின் காணொளித் தொகுப்பு..

இதையும் தவறாமல் படிங்க