திடீரென மயங்கி விழுந்த தமிழ் மாணவிகள் வைத்தியசாலையில்..! கிழக்கில் இன்று நடந்த சம்பவம்!!

  • Shan
  • June 25, 2019
466shares

பாடசாலையில் கல்வி கற்ற நிலையில் மயங்கி விழுந்து மீட்கப்பட்ட ஆறு மாணவ மாணவிகள் திடீர்சுகயீனம் காரணமாக சிகிச்சைக்கென காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த குறித்த ஆறு மாணவ மாணவிகளே இவ்வாறு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இவ்வாறு சிகிச்சை பெற்று வருபவர்களில் தரம் 11ஐ சேர்ந்த அ. டனுஸ்காந், யசோதா, மலர்விழி, தரம் 8 மாணவர்களான கே.எஸ் டனுஜா, ரஞ்சித் யதுசனா, உதயகுமார் டிலக்சன் ஆகிய மாணவர்களே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்படி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் கடும் வெயில் காரணமாகவும் காலை ஆகாரம் உண்ணாமை மற்றும் இதர காரணங்களாலும் திடீரென மயக்கமுற்ற நிலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையும் தவறாமல் படிங்க