திடீரென சரிந்து விழுந்த விமானங்கள்! மேலெழுந்த பாரிய புகைமூட்டம்!

  • Shan
  • June 25, 2019
813shares

ஜேர்மனியின் கிழக்கு மாநிலமான மெக்லன்பேர்க் வொபெர்மன் பகுதியில் அந்நாட்டின் இரண்டு போர் விமானங்கள் விழுந்து நொருங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

குறித்த இரண்டு விமானங்களும் மூன்றாம் தலைமுறை ஜெட் விமானங்கள் என்றும் அவை சம்பவ நேரம் ஆயுதங்களை ஏந்திச் செல்லவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

விமானங்களில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் விமானங்களிலிருந்த இரண்டு வானோடிகளும் பாதுகாப்பாக பரசூட் மூலம் வெளியேற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனாலும் காட்டுப் பகுதியில் குறித்த விமானங்கள் இரண்டும் விழுந்ததால் ஒரு வானோடி பலியாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க