நீர்கொழும்பில் நிலவிய பதற்றம்; தப்பியோடிய மூவர்; வான் நோக்கி திடீர் துப்பாக்கிச் சூடு!

  • Shan
  • June 25, 2019
311shares

சிறிலங்காவில் வெளிநாட்டுக் கைதிகள் இருவர் தப்பி ஓட முற்பட்டபோது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட பாகிஸ்தான் கைதிகள் இருவர் மற்றும் நைஜீரிய கைதி ஒருவருமாக மூவரும் தப்பியோட முற்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை நீண்ட தூரம் விரட்டிச் சென்ற சிறைக் காவலர்கள் மேல் வெடி வைத்து எச்சரித்ததைத் தொடர்ந்து குறித்த கைதிகள் மூவரும் மீண்டும் சரணடைந்தனர். இதனைத்தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இவர்கள் தப்பிச் செல்வதற்கு ஏதாவது பக்க உதவிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க