சிறிலங்காவுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியைக் கொடுத்த அமெரிக்கா!

  • Shan
  • June 25, 2019
421shares

இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் இலங்கை தொடர்பில் அமெரிக்கா தனது பிரசைகளுக்கு விதித்திருந்த பயண ஆலோசனையை குறைத்துள்ளது.

இதன்படி, தாக்குதலின் பின்னர் மூன்றாம் கட்டத்திலிருந்த தனது பயண ஆலோசனையினை அமெரிக்கா தற்பொழுது இரண்டாக குறைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின்போது அமெரிக்க பிரசைகள் சிலரும் உயிரிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து அமெரிக்க இராசாங்க திணைக்களம் தனது பிரசைகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்திருந்ததுடன் அமெரிக்க அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களை இலங்கையிலிருந்து வெளியேறுமாறும் பணித்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் பயணத்தடையினை நீக்கியுள்ள நிலையிலேயே தற்பொழுது பயண ஆலோசனையினையும் குறைத்துள்ளது.

இலங்கை சுற்றுலாத்துறைக்கு பாரிய நெருக்கடியாக இருந்த அமெரிக்கா உள்ளிட்ட பெரிய நாடுகளின் இந்த பயண ஆலோசனைகள் நீக்கப்படுகின்றமை தற்பொழுது மகிழ்ச்சியளிப்பதாக கூறப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க