உயிர்த்தஞாயிறு தாக்குதலில் முக்கிய திருப்பம் - தேசிய தவ்ஹீத் ஜமா அத்தின் தலைவரை காட்டிக் கொடுத்த சகாக்கள்!

290shares

தம்புள்ளவில் உள்ள விடுதியொன்றில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நௌபர் மௌலவி தேசிய தவ்ஹீத் ஜமா அத்தின் (என்.டி.ஜே) அமைப்பின் தலைவரென பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டுள்ளனர் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது சிஐடி காவலில் உள்ள குறித்த சந்தேக நபரை ஈஸ்டர் ஞாயிறு சந்தேக நபர்களின் முன்பாக கொண்டுவந்து நிறுத்தியவேளைஅவர்களால் அடையாளம் காட்டப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் தேசிய தவ்ஹீத் ஜமா அத்தின் குழுவின் தலைவர்கள் நௌபருடன் ஒரு சந்திப்பை நடத்தியதாகவும், அந்தக் கூட்டத்தின் போது வேறு பல திட்டங்களும் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், சஹ்ரான் ஹாஷிம் தான் தற்கொலைத் தாக்குதல்களை முன்மொழிந்தார்.

இந்த சந்திப்பில் இந்த தற்கொலைத் தாக்குதல்களை நடத்த தன்னுடன் இணையுமாறு பலரை அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள மௌலவியும் தேசிய தவ்ஹீத் ஜமா அத்தின் கருத்துக்களை பரப்புவதற்கு பொறுப்பான தலைவராக செயல்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க