இது சோமாலியாவில் அல்ல! தமிழர் தலைநகரில் தமிழ் மக்களின் இன்றைய நிலை!!

1583shares

தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் பாட்டாளிபுரம் என்ற இடத்தில் வாழ்ந்துவரும் தமிழ் குடும்பங்களின் இருப்பிடங்கள்தான் இவை.

வறுமையும் பசியும் வாட்டிவதைக்கும் அந்த உறவுகளையும் கொஞ்சம் நினைத்துக்கொள்வோம் - தமிழ் தேசியம் பற்றிப் பேசுகின்ற போது...

இந்தப்பகுதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனின் தேர்தல் தொகுதி.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேச்சு நடத்தி அரசுக்கு முண்டுகொடுத்துவரும் தமிழ்தேசியக் கூட்மைப்பு இந்த மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக செய்தது தான் என்ன? ரணில் அரசாங்கம் கவிழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக முண்டுகொடுத்துவருபவர்கள் இந்த மக்களாலேயே தாம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதனை ஏன்மறந்தனர்.

கம்பெரலிய திட்டத்தினூடாக பெருமளவு நிதியைப்பெற்று தனிநபர் வீடுகளுக்குச் செல்லும் வீதிகளையும் துரித கதியில் புனரமைப்பு செய்வதில் காட்டப்படும் வேகம் இந்த மக்களின் அடிப்படை வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முனையாதது ஏன்?

இந்தநிலையில் மக்களை மறந்து வாழும் மக்கள் பிரதிநிதிகளுக்கு தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கூட மக்களின் நிலை தெரியவரவில்லையா?

கடந்த முப்பது வருடங்களாக யுத்தவாழ்வுக்குள் நிர்க்கதியாக வாழ்ந்த மக்கள் தற்போது சொந்த இடத்துக்கு திரும்பியும் திரும்பாமலும் உள்ளநிலையில் அடிப்படை வாழ்வுக்கே அல்லலுறுகின்றனர்.

உறவுகளை இழந்து,தமது உடல் உறுப்புக்களை இழந்து எவருமே உதவ முன்வரமாட்டார்களா என ஏங்கும் எம்மவருக்கு அவர்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே முதுகை காட்டுவதுதான் வேதனை.

அத்துடன் தற்போது வரவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு யாரை ஆதரிக்கலாம் என மந்திராலோசனை வேறு. மக்களிடம் பல்வேறு பொய்களைச் சொல்லி ஆதரவுக்கரம் கோரவும் தீட்டப்படுகிறது திட்டம்

ஆனால் மக்களின் வாழ்வோ அதேநிலைதான்.....

நன்றி:ரஜிதன்

இதையும் தவறாமல் படிங்க