அமெரிக்க வெள்ளை மாளிகையின் நிலையை பாருங்கள்; மீட்க்கப்போராடும் ஊழியர்கள்!

230shares

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையின் கீழ்தளப் பகுதியிலும் மழைநீர் புகுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அந்நாட்டு நேரப்படி நேற்று காலை கனமழை பெய்தது. ஒரு மாதத்திற்கு பெய்யும் மழை ஒரு மணி நேரத்தில் கொட்டித் தீர்த்ததால் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சாலைகளில் திடீரென காட்டாறு போல பாய்ந்த வெள்ளத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். மழைநீர் வழிந்தோடி செல்ல வழியில்லாததால், இதுபோன்ற திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கனமழை, திடீர்வெள்ளப்பெருக்கின் பாதிப்புகள் வெள்ளை மாளிகையையும் விட்டு வைக்கவில்லை. வெள்ளை மாளிகையின் தரைகீழ் தளத்தில் மழைநீர் புகுந்தது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க