மலேசியா செல்ல இருந்த தமிழரை விமான நிலையத்தில் திருப்பி அனுப்பிய நிலையில் பரிதாப மரணம்; காரணம் இதுதான்!

1466shares

மலேசியா செல்ல இருந்த பயணி அளவுக்கு அதிகமாக மது குடித்ததில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

மலேசிய நாட்டில் உள்ள சிலாங்கூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 42). இவர் கடந்த 24-ந்தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக திருச்சி வந்துள்ளார்.

அப்போது இந்தியாவுக்கு சுற்றுலா வந்த மூர்த்தி, திருச்சியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்தில் மலேசியா செல்ல இருந்தார்.

அப்போது அவர் அதிக குடிபோதையில் இருந்ததால் அவரை விமானத்தில் ஏற்ற விமான நிறுவனத்தினர் மறுத்து விட்டனர். இதையடுத்து மீண்டும் விடுதிக்கு வந்து அறையில் தங்கிய அவர் அதன் பிறகு இறந்துள்ளார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மூர்த்தி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க