பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 102 கொள்கலன்கள்; திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியில்!

719shares

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 102 கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களில் 5 கொள்கலன்களை சுங்க அதிகாரிகள் திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் எனக் கூறி கொண்டுவரப்பட்ட இந்த கொள்கலன்களில் இருந்து தரை விரிப்பு, பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கம் குறிப்பிட்டது.

இந்த 102 கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவற்றில் 94 கொள்கலன்கள் இதுவரையில் இனங்காணப்பட்டு அவற்றில் 5 கொள்கலன்களே திறந்து பார்க்கப்பட்டுள்ளன.

இவற்றை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுங்க தரப்பினர் கூறினர்.

கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் இந்த சந்தேகத்திற்கிடமான கொள்கலன்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

கொள்கலன்கள் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதாக சுங்கம் குறிப்பிட்டது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் இரசாயன மற்றும் கழிவுப்பொருள் பிரிவின் அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொள்வதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

கழிவுப்பொருட்களை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு எவ்வகையிலும் இடமளிக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க