யாழில் அழுகிய நிலையில் வீடொன்றில் பெண்ணின் சடலம்! பொலிஸாரின் தீவிர நடவடிக்கை

227shares

யாழ்ப்பாணம் சுண்டுக்குழி காட்டு கந்தோர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அயலில் உள்ளவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அழுகிய நிலையில் சடலம் காணப்படுவதை கண்டுள்ளனர்.

இது தொடர்பில் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த யாழ்ப்பாணம் சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கடந்த ஐந்து நாட்களாக குறித்த பெண்ணினுடைய நடமாட்டம் காணப்படவில்லை என்றும் இன்றைய தினம் குறித்த வீட்டினுள் துர்நாற்றம் வீசியதை அடுத்து குறித்த வீட்டிற்கு சென்ற அயல் வீட்டுப் பெண் ஒருவர் அழுகிய நிலையில் சடலம் இருப்பதை கண்டுள்ளார்.

இதனையடுத்தே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் மாலதி என்ற 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. அத்துடன் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க