ரம்புட்டான் பழத்தினால் உயிராபத்து: எச்சரிக்கை விடுத்த சுகாதார பிரிவு அதிகாரிகள்

  • Jesi
  • July 11, 2019
593shares

ரம்புட்டான் பழத்தினை உட்கொண்டு விட்டு தோலினை விசுவதினால் அதில் நீர் தேங்கி நின்று டெங்கு பரவும் அபாய நிலை உருவாகியுள்ளதாக சுகாதார பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வருகின்றது. அதற்கு காரணம் ரம்புட்டான் பழத்தின் தோல்கள் என சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

ரம்புட்டான் உட்கொள்ளும் பலர் அதன் தோல்களை வீதியில் வீசிவிட்டு செல்வத்தினால் இந்த தோல்களில் தேங்கும் நீரில் டெங்கு நுளம்பு முட்டையிடுவதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் ரம்புட்டான் பழத்தின் தோல்களை உரிய முறையில் சேகரித்து கழிவுப்பொருட்களுடன் சேர்க்குமாறு மக்களிடம் சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயின் காரணமாக 32 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க