பொலிசாரின் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 3 வாகனங்களுடன் 9 பேர் கைது!

12shares
Image

வவுனியாவில் கடந்த மூன்று தினங்களாக மரக்கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக பொலிசார் மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின் போது 3 வாகனங்களுடன் 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளையும் கைப்பற்றியுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்பட்ட விஷேட பொலிஸ் பிரிவில் 7 பேரடங்கிய பொலிஸ் குழுவினரால் கடந்த மூன்று தினங்களாக வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நொச்சிக்குளம், புதூர், பரசங்குளம், அனந்தர்புளியங்குளம் பகுதிகளில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புக்களின் போது 20 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை குற்றிகள் 35, தேக்கங்குற்றிகள் 15 என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளதுடன்.

இதற்குப்பயன்படுத்திய பாரஊர்தி, பட்டா ரக கப் வாகனங்கள் என்பனவற்றுடன் சந்தேக நபர்கள் 9 பேரையும் கடந்த மூன்று தினங்களில் கைது செய்துள்ளதாகவும் இவர்கள் நீண்டகாலமாக இவ்வாறான சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

கைப்பற்றிய பொருட்களுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்விஷேட நடவடிக்கையின்போது பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் பொன்சேகா, பொலிஸ் பொறுப்பதிகாரி சுபுள் விதானகே, பொலிஸ் பரிசோதகர்களான ரட்ணாயக்க, ஜெயசூரிய, திஸாநாயக்க, அத்தநாயக்க, பொலிஸ் உதவி பரிசோதகர் சேனநாயக்க ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க