உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! அதிகரித்துக்கொண்டே செல்லும் உயிரிழப்புக்கள்

35shares

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக ராகமை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

80 நாட்கள் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையிலே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, குறித்த குண்டு தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் உள்ளவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர்.

இதனால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க