தெற்கு கடற்பகுதியில் கடற்படையிடம் சிக்கிய அடையாளம் தெரியாத கப்பல்கள்

23shares

கொழும்பு கடற்பகுதியில் இன்றையதினம் 60 கிலோ போதைப்பொருளுடன் அடையாளம் தெரியாத மீன்பிடி கப்பல் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா கடற்படையின் பேச்சாளர் தெரிவிக்கையில்

கைப்பற்றப்பட்ட மீன்பிடி கப்பலில் எந்தவொரு கொடியோ அல்லது அடையாளங்களோ இல்லை .இதனால் அது அடையாளம் காணப்படவில்லை.இதனை கரைக்கு கொண்டுவரும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

இதேவேளை தெற்கு கடற்பகுதியில் பலநாள் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடும் இழுவைப்படகொன்றிலிருந்து போதைப்பொருட்களுடன் நால்வர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நேற்றையதினமும் இன்றையதினமும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் ஒன்றுடனொன்று தொடர்புபட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க