அம்பாறையில் மடக்கப்பட்டனர் இருவர்!

99shares

அம்பாறை ஒலுவில் சந்திப்பகுதியில் வைத்து நேற்றையதினம் இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

5.310 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற நிலையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒலுவில் சந்தியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமாக சென்ற இருவரை கடற்படையினர் சோதனையிட்டவேளை அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஐந்து சிறிய பைக்கற்றுக்களில் ஹெரோயினை மறைத்துவைத்து கொண்டுசென்றவேளையே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் முறையே 21 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்முனையிலுள்ள விசேட அதிரப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க