ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நால்வர் மாதகலில் கைது!

94shares

ஸ்ரீலங்கா கடற்படையினர் யாழ்ப்பாணம் இளவாலை பொலிசாருடன் இணைந்து நேற்றையதினம் மாதகல் பகுதியில் மேற்கொண்டசோதனைநடவடிக்கையின் போது 64 கிராம் கேரள கஞ்சாவுடன் 04 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

மாதகல் பகுதியில் வீடொன்றுக்குள் இருந்து குறித்த கஞ்சா பொதியுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 50, 27, 26 மற்றும் 22 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன் இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மூன்று மகன்கள் என கண்டறியப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க