தட்டம்மை நோயை முற்றாக இல்லாதொழித்திருக்கும் நாடு இலங்கை!

10shares

சிறுபிள்ளைகளை தாக்கும் தட்டம்மை நோயை இலங்கை முற்றாக இல்லாதொழித்திருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருக்கிறது.

இந்த வெற்றி இலங்கையின் திடப்பாடு மற்றும் சுகாதார செயற்திறன் என்பவற்றை வெளிக்காட்டுவதாகவும் தெரிவித்திருக்கிறது.

இலங்கையில் தட்டம்மை முற்றுமுழுதாக ஒழிக்கப்பட்டிருக்கிறதா என்பதற்கான தரவுகளை சுயாதீன குழுவொன்று பரிசீலனை செய்திருக்கிறது.

அதன்படி இறுதியாக 2016 மே மாதத்தில் இலங்கையில் சிலர் தட்டம்மை நோய் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

இருப்பினும் கடந்த மூன்றாடுகளில் அரிதாகவே காணப்பட்ட இந்நோய்த் தொற்று வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்களின் ஊடாகப் பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

அத்துடன் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு உரிய சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.

இலங்கையில் சிறுபிள்ளைகளுக்கு ருபெல்லா தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் கிரமமாக முன்னெடுக்கப்பட்டு வந்தமை தட்டம்மை நோய் ஒழிப்பில் முக்கிய பங்காற்றியிருப்பதாக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க