மருத்துவர் ஷாபியின் பிணைமனு நிராகரிப்பு!

17shares

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு, இன்றையதினம் குருநாகல் நீதிமன்றில் நடைபெற்றவேளை ஷாபியின் பிணை மறுக்கப்பட்டநிலையில் அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு, தாய்மாருக்கு கருத்தடை சத்திரசிக்சை செய்தமை, பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு, இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்​கொள்ளப்படட்டநிலையில், ஷாபி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில்,பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில், காரணங்களை தெளிவுபடுத்துவதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மத்தேகொட நீதிமன்றத்துக்கு வருகைத் தராமை காரணமாக, வழக்கு விசாரணை பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் ஆரம்பமானது.

வைத்தியர் ஷாபி சார்பில் சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் உட்பட 7 பேர் வாதாடியதுடன், எதிராக 20 பேர் கொண்ட குழுவினர் வாதாடினர்.

நீதிமன்றத்தின் வெளியில் ஏராளமான பொதுமக்கள் குழுமயிருந்தனர். வைத்தியசாலை அருகில் ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் இடம் பெற்றன.

இதையும் தவறாமல் படிங்க