மைத்திரிக்கு எதிராக கை உயர்த்த தயாராகும் எம்.பிக்கள்!

48shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நாடாளுமன்றில் குற்றவியல் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு ஆதரவாக வாக்களிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை என்னால் பெற்றுத்தரமுடியும்.

அத்துடன் உயிர்த்தஞாயிறு தாக்குதல்களுக்கான பொறுப்புக்களில் இருந்து ஜனாதிபதி தனது கைகளை கழுவி நழுவி விடமுடியாது.

இநத தாக்குதல் தொடர்பில் அலட்சியம் செய்ததற்காக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு சுமத்தப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க