மாங்குளத்தில் இன்றுமாலை நடந்த களேபரம் - வீடுகளின் கூரைகள் பறந்தன.மரங்கள் முறிந்து வீழ்ந்தன

47shares

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் இன்று மாலை வீசிய கடும் காற்று காரணமாக பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக கடும் வறட்சியும் வெப்பமும் நிலவி வந்த நிலையில் இன்று சில இடங்களில் மழை பெய்தது

இந்நிலையில் இன்று மாலை நான்கு 30 மணியளவில் மாங்குளம் பகுதியில் வீசிய கடும் காற்றினால் வீதிகளில் வீதியோரங்களில் நின்ற மரங்கள் பல முறிந்து விழுந்து வீதியில் போக்குவரத்து தடைப்பட்டது. அத்தோடு மக்களுடைய வாழ்விடங்களில் பயன்தரு மரங்கள் பலவும் நாசமாகியுள்ளன

மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 9 வீடுகளும் தச்சடம்பன் பகுதியில் ஒரு வீடும் புலுமச்சிநாதகுளம் பகுதியில் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் சேதமடைந்த வீடுகளை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த அகிலன், மாங்குளம் கிராம அலுவலர் தனபால்ராஜ், அம்பகாமம் பதில் கிராம அலுவலர் ரஞ்சிதகுமார், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் மு முகுந்தகஜன்,மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க