வருடத்தின் அரையாண்டில் ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேறிய ஒரு இலட்சம்பேர்!

40shares

இந்தாண்டு முதல் 6 மாத காலப்பகுதிக்குள் 95,908 பேர் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பதாகவும்

இதில் 56,526 பேர் ஆண்களென்றும் இவர்களுள் 16, 626 பேர் கட்டாருக்கு பயணமாகியுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 39,382 பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளனரென்றும் இதில் அதிகமாக, 14,948 பேர் குவைட்டுக்குச் சென்றுள்ளனரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஜூன் மாதம் வரையான காலத்தில் 39,382 பெண் தொழிலாளர்கள் வௌிநாடு சென்றுள்ளதுடன் அது மொத்த வௌிநாடு சென்றுள்ள தொழிலாளர்களில் 41 வீதம் ஆகும்.

இதேவேளை சவுதி நாட்டுக்கு தொழிலுக்காக சென்றுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16,747 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க