தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க படையெடுக்கவுள்ள புலனாய்வாளர்கள்!

13shares

உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் புலனாய்வுத்துறையின் தலைவர் நிலாந்த ஜயவர்தன ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு

எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு தெரிவுக்குழு மீளவும் கூடவுள்ளது.இந்த அமர்வில் ஆஜராகுமாறு சிஐடி பணிப்பாளர் ரி செனவிரத்ன, சானி அபேசேகர, வருண ஜயசுந்தர, மற்றும் தரங்க பத்திரண ஆகிய புலனாய்வுப்பிரிவைச்சேர்ந்த உயர் அதிகாரிகளை ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

தெரிவுக்குழுவின் அமர்வுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் நிறைவுக்கு கொண்டுவரப்படும் என மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க