உயிர்த்தஞாயிறு தாக்குதல் எதிரொலி - பட்டினியின் விளிம்பில் விலங்குகள்!

35shares

உயிர்த்தஞாயிறு தாக்குதல் எதிரொலியால் ஸ்ரீலங்காவிலுள்ள தேசிய மிருககாட்சிச்சாலைகளில் உள்ள மிருகங்கள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவிலுள்ள மிருககாட்சிச்சாலை மற்றும் பிற உயிரியல் பூங்காக்களுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் 95 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.இதனால் இந்த மிருகங்களுக்கு உணவுகளை அளிப்பதற்கு நிதியை கண்டுபிடிக்கும் வழியை காண்பது கடினமாக உள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த மிருகங்களுக்கு உணவளிக்க நாளொன்றுக்கு ரூபா ஆறு இலட்சம் நிதி தேவைப்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எனவே இந்த மிருகங்களுக்கு உணவை அளிக்க திறைசேரியிடமிருந்து பணத்தைப்பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இதையும் தவறாமல் படிங்க