இந்த வருடம் 40 பேரை பலியெடுத்த சோகம்! மக்களே அவதானம்

14shares

இந்த வருடத்தின் ஜூலை மாதம் பத்தாம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் டெங்குத்தொற்றுக்கு இலக்காகி 40 பேர் உயிரிழந்ததுடன் 27 ஆயிரத்து 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோய் தா்கத்தால் கூடுதலாக கொழும்பு மாவட்டமே பாதிக்கப்பட்டுள்ளது.இதன்படி அந்த மாவட்டத்தில் 5820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இரண்டாவதாக கம்பகா மாவட்டத்தில் 3536 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மூன்றாவதாக காலி மாவட்டம் பதிவாகியுள்ளது. அங்கு 2594 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாநகரசபை வெளியிட்ட தகவலின்படி இந்தக்காலப்பகுதியில் 1141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொழும்பு மாநகரசபை தவிர்ந்த பிறபகுதிகளில் 4679 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்தில் மொத்தமாக 11394 பேர் டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் மே மாதத்தில் 4239 பேரும் ஜூன்மாதத்தில் 5498 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க