ரத்னதேரரின் பேச்சைக் கேட்க தமிழர்கள் முட்டாள்கள் அல்ல! ரிஷாட்

128shares

ரத்னதேரரின் பேச்சைக் கேட்க தமிழர்கள் முட்டாள்கள் அல்ல என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஜே.வி.பி.யினரால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீது இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் இந்த சபையில் இனவாதத்தை கக்கி வருகின்றார்.

கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் மக்களை திருப்ப முயற்சிக்கின்றார்.ஆனால் தமிழ் மக்கள் இவரின் பேச்சைக் கேட்க முட்டாள்கள் அல்லர்.

வைத்தியர் ஷாபி மீது மேற்கொண்ட குற்றச்சாட்டு பொய் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்து அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என முயற்சிக்கின்றனர்.

இது அவரின் மடமைத்தனமாகும். இதுபோன்ற பல இனவாத கருத்துக்களை தனது அரசியலுக்காக அவர் தெரிவித்து வருகின்றார்.” என்று தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க