ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம்! 18 பேருக்கு வழங்கப்பட்ட உத்தரவு

60shares

மாவனெல்லையில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த 18 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு மாவனெல்லை நீதவான் உத்திரவிட்டுள்ளார்.

மாவனெல்லை உள்ளிட்ட பிரதேசங்களில் புத்தர் சிலை உடைப்பு சம்வத்துடன் தொடர்புடைய மேலும் 6 சந்தேகநபர்கள் வியாழக்கிழமை குற்றத்தடுப்பு பிரிவினரால் மாவனெல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

புத்தர் சிலை உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் சேர்த்து சந்தேகநபர்கள் 18 பேரையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தடுத்து வைக்குமாறு மாவனெல்ல நீதவான் உபுல் ராஜகருணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

திருகோணமலை மூதூர் தேர்தல் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

திருகோணமலை மூதூர் தேர்தல் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்