அமெரிக்காவில் கிரீன் கார்ட்டுக்காக காத்திருக்கும் வெளிநாட்டினருக்கு கிடைக்கப்போகும் வரப்பிரசாதம்!

130shares

அமெரிக்காவில் ‘கிரீன் கார்ட்’ வழங்குவதற்கு உள்ள 7 சதவீத உச்சவரம்பை நீக்கி, 15 சதவீதமாக உயர்த்துவதற்கு வகை செய்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் மசோதா நிறைவேறியது.

அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணி புரிய விரும்புகிற பிற நாட்டினருக்கு ‘கிரீன் கார்ட்’ வழங்கப்படுகிறது.

அங்கு 3 ஆண்டு காலம் தங்கி வேலை செய்ய விரும்புகிற வெளிநாட்டினருக்கு ‘எச்-1பி’ விசா தரப்படுகிறது.

இந்த விசா மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கத்தக்கது.‘எச்-1பி’ விசாதாரர்களில் மிகவும் திறமையும், தகுதியும் வாய்ந்த 7 சதவீதம் பேருக்குத்தான் நிரந்தரமாக தங்கி வேலை செய்ய வசதியாக ‘கிரீன் கார்ட்’ தரப்படுகிறது.

அதுவும் விண்ணப்ப மூப்பு அடிப்படையில் தரப்படுவதால், ‘கிரீன் கார்ட்’க்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில் ‘கிரீன் கார்ட்’ வழங்குவதற்கு உள்ள 7 சதவீத உச்சவரம்பை நீக்கி, 15 சதவீதமாக உயர்த்துவதற்கு வகை செய்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா மீது நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 365 எம்.பி.க்களும், எதிராக 65 வாக்குகளும் விழுந்தன.

பெரும்பான்மையானோர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் மசோதா நிறைவேறியது.

இந்த மசோதா அடுத்து செனட் சபையில் நிறைவேற வேண்டும். அங்கு குடியரசு கட்சியினருக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது.

அதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட வேண்டும். அவர் கையெழுத்து போட்டு விட்டால் மசோதா சட்டமாகி நடைமுறைக்கு வந்துவிடும்.

இந்த சட்டம், அமெரிக்காவில் ‘கிரீன் கார்ட்’க்காக பல்லாண்டு காலமாக காத்திருக்கிற வெளிநாட்டினருக்கு வரப்பிரசாதமாக அமையும்.

இதையும் தவறாமல் படிங்க