இலங்கையில் மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படும்; ராஜித உறுதி!

  • Shan
  • July 12, 2019
6shares

இலங்கையில் மருந்து வகைகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார போசணைகள் மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் நாடிற்கு உயர் தரத்திலான மருந்து வகைகள் மாத்திரமே இறக்குமதி செய்யப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர் ராஜித்த, மருந்து வகைகளின் விலையை குறைத்து, உயர் தரத்திலான மருந்து வகைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதியளித்தார். அத்துடன் சிலர் இந்த வேலைத்திட்டத்திற்கு தடையை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, மருந்து வகைகளின் விலையை குறைக்க அமைச்சர் ராஜித்த சேனாரட்ன எடுத்துள்ள நடவடிக்கையை தயாசிறி ஜயசேகர பாராட்டி பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க