மீண்டும் அமைச்சுப் பதவி- (செய்திப் பார்வை)

18shares

கல்முனை விவகாரம், முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளிட்ட சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் நேற்றைய தினம் ஒன்றுகூடி கலந்துரையாடினர்

மத்திய கிழக்க நாடுகளில் பணி புரிந்த நிலையில், அங்கிருந்து 858 பெண்கள் நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளனர். வெளிநாடுகளில் தூதரக அலுவலகங்களில் தொழிலாளர் பிரிவின் கீழ் நடத்தப்பட்டு வரும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு தாயகம் திரும்பியுள்ளனர்.

மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் வான் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் படுகாயமடைந்த கருணாகரன் உமாசங்கரி என்ற மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது போன்ற மேலதிக செய்திகளை தாங்கியவாறு அமைகின்றது இன்றைய செய்திப் பார்வை

இதையும் தவறாமல் படிங்க