சூர்யாவின் உதவியால் போரினால் குடும்பத்தையே இழந்த ஈழத்தமிழ் மாணவன் படைத்த சாதனை; நெகிழ்ச்சியில் கண்கலங்கிய சிவகுமார் குடும்பம்!

2942shares

கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் இலங்கை அகதி மாணவன் ஒருவர் பிஎச்டி ஆய்வு பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

நடிகர் சிவகுமார் தலைமையிலான சிவகுமார் கல்வி அறக்கட்டளையும், நடிகர் சூர்யா தலைமையிலான அகரம் பவுண்டேஷன் அறக்கட்டளையும் இணைந்து வழங்கிய கல்வி உதவித் தொகையின் மூலம் இவர் பயின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாணவன் ராமநாதன்,

இலங்கை அகதிகள் முகாமில் வளர்ந்த நான். தாய் தந்தையை இழந்தவன். இருந்த அண்ணனும் போரில் இறந்துவிட்டார்.

இந்த நிலையில் எப்படிப் போகுமோ கல்வி, என்ன ஆகுமோ எதிர்காலம் என்று ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் உதவிக்கரம் நீட்டியவர்கள் சிவகுமார் குடும்பத்தினர்.

என்னுடைய கல்வி வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமே சிவக்குமாரும், அவரது மகன்கள் சூர்யா – கார்த்திக் தலைமையிலான அகரம் பவுண்டேஷன் என்று நெகிழ்ச்சியோடு சொன்னார்.

இவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறிய ராமநாதன் மேடையில் விழுந்து நமஸ்கரித்து எழுந்தார்.

இதன்போது சிவகுமாரும், அவரது மகன்கள் சூர்யா – கார்த்திக்கும் அனைவருமே கண்கலங்கினர்.

உதவித்தொகை பெற்று இன்றைக்கு மற்ற மாணவர்களுக்கு முன்னோடியாக இருக்கும் ராமநாதன், கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

மேற்கொண்டு தொடரும் ஆய்வு படிப்புக்காக சீனா பயணமாகிறார். அதற்கு ஆகும் செலவு தொகையையும் தாங்கள் ஏற்பதாக சிவகுமார், சூர்யா சொன்னதைக் கேட்டு மேடையில் ஆத்மார்த்தமாக நன்றி சொன்னார்.

எதிர்காலத்தில் விஞ்ஞானி ஆகவேண்டும். மனிதகுல சேவைக்கான ஏதாவது ஒன்றை ஆய்வில் கண்டு பிடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. என்னுடைய கல்விப்பயணம் இதோடு முடிவதில்லை.

இன்னும் இன்னும் கல்வியின் உச்சத்தை தொட வேண்டும் என்ற வெறியில் இருக்கிறேன். பெரிதாக எதையாவது ஒன்றை சாதித்து காட்ட வேண்டும் என்ற உணர்வில் இருக்கிறேன். என்று மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க