இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா செல்லவுள்ளோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!

  • Jesi
  • July 15, 2019
477shares

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரிற்கு குறைந்த கட்டணங்களில் விமான சேவைகளை வழங்க ஜெட் ஸ்ரார் எயர்வேய்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.

சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹொலி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

‘மெல்பேர்ணில் இருந்து கொழும்புக்கு சிறிலங்கன் விமான சேவையின் நேரடி விமான சேவை மிகவும் பிரபலமாக உள்ளது.

சிட்னியில் இருந்தும் சிறிலங்கன் நிறுவனம் விரைவில் விமான சேவையை ஆரம்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் அவுஸ்ரேலியாவில் இருந்து 4000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் விமான மூலமாகவே வந்துள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெட் ஸ்ரார் எயர்வேய்ஸ், குவான்டாஸ் விமான நிறுவனத்தின் மானியத்தில் இயங்கும் ஒரு துணை நிறுவனமாகும்.

குறைந்த கட்டண விமான சேவையான வேர்ஜின் புளூவின் போட்டியைச் சமாளிக்கவே இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.

இதையும் தவறாமல் படிங்க