முட்டி மோதிக் கொண்டிருந்த கட்சிகள் இணைந்தன! கிழக்கில் இன்று நடந்த சம்பவம்

  • Jesi
  • July 15, 2019
277shares

கிழக்கில் சமகால தமிழர் அரசியலின் செல்நெறிப்போக்கு மற்றும் அரசியல் கலாசாரத்தை தீர்க்கமாக புரிந்து கொண்டு எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றக் கூடிய வகையில் பாரிய அரசியற் கூட்டமைப்பை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது

கிழக்கின் ஈழத்தமிழரின் அரசியற் போக்கை நெறிப்படுத்த தேசப்பற்றுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து கொள்ள வேண்டும் என்ற கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களின் அபிலாஷையை முன்னிருத்தி ஈழத் தமிழர் பேரவை குறிப்பிட்ட கலந்துரையாடலுக்கான அழைப்பை விடுத்திருந்தது.

ஈழத்தமிழர் பரப்பில் இயங்குகின்ற 9 அரசியல் கட்சிகளான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், மக்கள் முற்போக்குக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்ற அரசியல் கட்சிகளும் , கௌரவ வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்குத் தமிழர் அமைப்பு, தமிழர் சிவில் சமூகங்களின் கூட்டமைப்பு, ஐனநாயகத் தமிழர் ஆகிய அமைப்புகளும் கலந்து கொண்டன.

ஒன்றிணைந்த வட கிழக்கு தமிழரின் பூர்வீக தாயகம் என்பதை ஏற்றுக்கொண்டு, சமகாலத்தில் கிழக்கில் வாழும் தமிழர்களின் சமூகப் பொருளாதார அரசியல் இருப்பை வலுப்படுத்த ஓர் அரசியல் கூட்டமைப்பை உருவாக்குவதற்கும் அதில் காத்திரமாக இணைந்து பணியாற்றவும் பங்குபற்றிய அனைத்து அரசியல் தரப்புகளும் இணங்கியதோடு மேற்கொண்டு கூட்டணியை அமைப்பது சம்பந்தமாக காரியமாற்றவும் கட்சிகள் இணங்கியுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க