அகத்தியர் அடிகளார் முகத்தில் சுடுநீர் ஊற்றிய சிங்களவர்கள்! களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட் ( வீடியோ இணைப்பு)

1214shares

அகத்தியர் அடிகளார் முகத்தில் சுடுநீர் ஊற்றிய சிங்களவர்கள்! களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட் :

திருகோணமலை - கன்னியா பிரதேசத்தில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெறவிருந்த நிலையில் தற்போது பதற்றமான சூழல் நிலவிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

இந்த நிலையில் திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதி, கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் அதிகளவிலான மக்கள் கூடி இருகின்றனர். எனினும் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதுடன், கன்னியா வெந்நீரூற்றுக்கு செல்லும் வீதியும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அகத்தியர் அடிகளார் முகத்தில் சிங்களவர்கள் சுடுநீர் ஊற்றியுள்ளமை மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவவிடத்திலிருந்து இது தொடர்பான முழுமையாக காணொளி .. கீழே..

இதையும் தவறாமல் படிங்க