பட்டதாரிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி; அறிவிப்பை வெளியிட்டது அரசாங்கம்!

  • Jesi
  • July 20, 2019
166shares

15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அடுத்த மாதம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கு அனைத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கிரிவுள்ள என்ற இடத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் உரையாற்றினார். ஹேன்டியகல சிறி இரத்தினபால மகா வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்ட 3 மாடி கட்டடத்தை மாணவர்களிடம் கையளிப்பதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்குவது தொடர்பாக பிரதமருடன் கலந்துரையாடி இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

இதையும் தவறாமல் படிங்க