யாழில் இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: பொலிஸ் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பலியான இளைஞன் இவர்தான்!

1323shares
Image

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் பொலிஸ் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றது.

3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் பயணித்ததாகவும் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களை மறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அறிய முடிகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்கல் நடத்த சென்ற ஆவா குழுவைச் சேர்ந்தவரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க