யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சோகமான குடும்ப பின்னணி; தாயின் எதிர்கால நிலை?!

1362shares

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொடிகாமம் கச்சாயைச்சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன்(வயது 23) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு வருகை தந்த இளைஞனின் உறவினர்கள் அடையாளம் காட்டினர்.

தென்மராட்சியிலிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் நேற்றிரவு புறப்பட்டனர் என்று இளைஞனின் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தப்பித்த அனைவரும் தென்மராட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்துவிட்டார் என்றும் ஒரே ஒரு பிள்ளையான இவர் தாயாருடனே வாழ்ந்து வந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கும் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து 2 வாள்களையும் மீட்டிருந்தனர்.

அத்துடன், உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு போலியானது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“மானிப்பாய் பொலிஸ் பிரிவில் மானிப்பாய் - இணுவில் வீதியில் ஆவா குழு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்திருந்தது. அதனால் மானிப்பாய், கோப்பாய், சுன்னாகம் மற்றும் கொடிகாமம் ஆகிய பொலிஸ் பிரிவுகள் இணைந்து ஆவா குழுவை கைது செய்ய சிறப்பு நடவடிக்கை எடுத்திருந்தது.

சிறப்பு அணி மானிப்பாய் - இணுவில் வீதியில் களமிறக்கப்பட்டிருந்தது. ஆவா குழுவைச் சேர்ந்தோர் வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்களை வழிமறித்து கைது செய்ய பொலிஸார் முற்பட்டனர். எனினும் தப்பிக்க முற்பட்ட போது ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

அதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மற்றவர் படுகாயமடைந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கஜேந்திரா வாள் ஒன்று சம்பவ இடத்தில் மீட்கப்பட்டுள்ளது. மேலும் நால்வர் தப்பித்துள்ளனர். அவர்களைப் பிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சம்பவத்தையடுத்து மானிப்பாய் பொலிஸாருடன் இணைந்து ஏனைய பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸாரும் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க