சுட்டுக்கொல்லப்பட்ட கவிகஜன் தொடர்பாக வெளியான புதிய தகவல்கள்!

2310shares
Image

கொடிகாமம் கச்சாயைச்சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் என்ற இளைஞன் நேற்றிரவு பொலிசாரால் யாழ். மானிப்பாய் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்துவிட்டார் என்றும் ஒரே ஒரு பிள்ளையான இவர் தாயாருடனே வாழ்ந்து வந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கும் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து 2 வாள்களையும் மீட்டிருந்தனர்.

இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட கவிகஜனை நேற்று மதியம் ஒரு மணியளவில் சாவகச்சேரி பகுதியில் கண்டதாகவும், நான் வேலையாக சென்றதால் அவருடன் கதைக்கவில்லை என அவரது நண்பர் ஒருவர் எமக்கு தெரிவித்தார்.

மேலும் நீர்வேலிக்கு பிறந்தநாள் நிகழ்வொன்று செல்வதாக கூறியே கவிகஜன் நேற்றிரவு சென்றதாகவும், அவருடன் சென்றவர்களின் தொலைபேசிக்கு அழைத்த நிலையில் எந்தவித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என அவரின் நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க