முஸ்லிம்களின் கடைகளுக்கு முன்பாக பன்றி தலைகளை தொங்கவிட்ட இனந்தெரியாத நபர்கள்!

  • Jesi
  • July 21, 2019
384shares

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவபிட்டிய புனித செபஸ்த்தியார் தேவாலயம் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) காலை திறக்கப்படும் நிலையில், கட்டுவிபிட்டிய தேவாலயத்திற்கு அண்மித்ததாக உள்ள மீரிகமை பிரதான வீதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகளுக்கு முன்பாக பன்றிகளின் தலைகளை இனந்தெரியாத நபர்கள் தொங்கவிட்டுள்ளனர்.

மீரிகமை வீதி இ மைமாகொடை பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான மூன்று கடைகளின் முன்பாக இவ்வாறு பன்றிகளின் தலைகள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன.

நேற்று சனிக்கிழமை (20) இந்த பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களின் கடைகளுக்கு சென்ற இனந்தெரியாத குழுவொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை கட்டுவபிட்டிய தேவாலயம் மீண்டும் திறக்கப்படவுள்ளதால் கடைகளை மூட வேண்டும் என்று சூறி அதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் கொடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில்இ இன்று (21) காலை கடை உரிமையாளர் ஒருவருக்கு அவரின் கடையின் முன்பாக பன்றின் தலை தொங்கவிடப்பட்டுள்ளதாக ஒருவர் தகவல் வழங்கியுள்ளார்.

கடை உரிமையாளர்கள் அதனை பார்க்கச் சென்றபோது மூன்று கடைகளின் வாயில் கதவில் பன்றிகளின் தலைகள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளதை கண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கட்டானை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!