சோளம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

  • Jesi
  • July 21, 2019
46shares

தேசிய சோள உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு கிலோ சோளத்தின் கொள்வனவு விலையை 5.00 ரூபாவினால் அதிகரிப்பதாக கமத்தொழில் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம், தந்திரிமலை, போகொட வீதியை காப்பட் இட்டு சீர் செய்யும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டார்.

நாம் தற்பொழுது சோள உற்பத்தியை மேற்கொள்பவர்களுக்கு உதவி வருகின்றோம். நாம் தற்பொழுது சோளத்தை உற்பத்தி செய்பவர்களுக்கு 100 000 ரூபா செலவினால் 60 000 த்தை இனாமாக வழங்குவதற்கும் நாம் தயார். இதே போன்று 3 000 குடும்பங்களை தெரிவு செய்துள்ளோம்.

சோள இறக்குமதியை நிறுத்துவதற்கும் நாம் முயற்சித்து வருகின்றோம். சோள இறக்குமதிக்கு தற்பொழுது சர்வதேச சந்தையில் நல்ல கிறாக்கி உண்டு. விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் சோளத்தின் விலை 45 ரூபா ஆகும். நான் இதனை 50 ரூபாவாக அதிகரிப்போன் என்றும் அவர் மேலும் தெரிவித்தர்.

இதையும் தவறாமல் படிங்க