வவுனியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற துயரம்! இளைஞன் பலி!

279shares
Image

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் இன்று அதிகாலை வவுனியாவிலிருந்து சென்ற புகையிரதத்துடன் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மூன்று முறிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள தனியார் பேருந்துகள் தரிப்பிடத்தில் பேருந்துகளை சுத்தம் செய்து வந்த மதுஷான் திலிந்த ஜெயவீர என்ற 25 வயதுடைய கல்கமுவ பகுதியைச் சேந்த இளைஞனே இவ்வாறு புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாகவும் இனங்காணப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு வவுனியாவிலிருந்து கொழும்பு சென்ற புகையிரதத்துடன் மோதி உயிரிழந்திருக்கலாம் அல்லது புகையிரதக்கடவையில் படுத்துறங்கியிருந்தபோது இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் புகையிரதக்கடவைக்கு அருகே காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் சில்லறைக்காசு தீப்பெட்டி என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் விபத்தா? அல்லது தற்கொலையா? போன்ற விடயங்கள் தெரியவரவில்லை மேலதிக விசாரணகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
loading...