ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவித்தார் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்!

602shares

ஜனாதிபதிதேர்தல் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 07 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்தக்காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் சபாநாயகர் அறிந்துள்ளனர்.

எனினும் தேர்தல் திகதியை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது.ஜனாதிபதியும் விரைவில் தேர்தலை நடத்த அழைப்பு விடுக்க முடியும்.குறிப்பிட்ட திகதிக்கு அப்பால் தேர்தல்களை ஒத்திவைக்க அவரால் முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க